அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்

Update: 2022-09-19 14:19 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி, திண்ணியம், கோமாகுடி,ஆலங்குடி, மேட்டுப்பட்டி, சிறுமியங்குடி, அன்பில், ஆதிகுடி, பூவாளூர் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடியாக கொள்முதல் செய்யபடும். தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் நெல்கள் அனைத்தும் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்