மரக்காணம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வெளியானதால், அதனை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை பணியாளர்கள் மூடாமல் சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.