சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பள்ளிப்பட்டி கிராமம் காலாண்டியூரில் வசித்துவரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் பொதுகழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்.