சேலம் ஜங்ஷன் ரெயில்வே நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. இந்த பகுதியிலேயே நான்கு ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகிறது. ஏ.டி.எம். மையத்தின் மிக அருகிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களுக்கு வந்து செல்ல சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.