கரூர் மாவட்டம், நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிக்கறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கோழி கழிவுகளையும், மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் மூட்டை, மூட்டையாக போட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்து வருவதால் அந்த கழிவுகள் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டுவருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த கழிவுகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.