தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஅள்ளி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் தளவாய்அள்ளி, புதூர் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜய், தர்மபுரி.