கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியிலும், ஆவின் மேம்பாலம் அருகிலும் சிக்னல் விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இந்த இடங்களில் சிக்னல் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.