தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா பஸ் நிறுத்தம் குளிர்சாதன வசதியுடன் இருந்தது. தற்போது இந்த பஸ் நிறுத்தம் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சிரமப்படுகின்றனர். மேலும் குளிர் சாதனம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூட்டிக்கிடக்கும் பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன்,பட்டுக்கோட்டை