தேன்கனிக்கோட்டையை அடுத்த தண்டரை கிராமத்தின் அருகே சனத்குமார் ஆற்றின் குறுக்கே பாலத்தின் கீழ்பகுதியில் மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கெட்டுப்போன இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வழியாக செல்பவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நோய் பரவும் அபாயம் உள்ளதால் சனத்குமார் ஆற்றில் பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டும்.