கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சியில் அண்ணா சிலை அருேக சிறிய பஸ்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ்நிலையம் அகற்றப்பட்டு அம்பை செல்லும் பயணிகளுக்கும், தென்காசி செல்லும் பயணிகளுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு பஸ்நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அங்கும் இங்குமாக தேடிச் செல்வதால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உகந்த இடத்தில் பஸ்நிலையம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.