கோவில்பட்டி தோணுகால் விலக்கில் ஆஸ்பத்திரி அருகில் உள்ள வேகத்தடை மற்றும் திருமண மண்டபம் அருகே அணுகுசாலை வேகத்தடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டு விட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகுசாலைக்கு வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?