பாளையங்கோட்டை சிவந்திப்பட்டியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரைச் சுற்றி கொடிக்குளம், ஆலங்குளம், முத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியாகராஜநகருக்கு சென்று வர வேண்டியுள்ளது. எனவே சிவந்திப்பட்டி கிராமத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று அமைத்தால் அனைவரும் பயன் பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.