பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-09-17 16:06 GMT

நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையோரத்தில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு பள்ளம் இருப்பதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்