பெங்களூரு ஓ.எம்.பி.ஆர். லேஅவுட் 5-வது கிராஸ் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் சிமெண்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளால், நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையில் இருக்கும் சிமெண்டு தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.