பார்வையாளர்கள் காத்திருப்பு கூடம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-13 15:09 GMT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு திருவாரூர் மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு உள்நோயாளிகளாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புற நோயாளிகளாகவும் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்புடன் காணப்படும். இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உரிய காத்திருப்பு கூடம் இருக்கை வசதிகளுடன் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆஸ்பத்திாி வளாகத்தில் பார்வையாளர்கள் காத்திருப்பு கூடம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்