கோட்டூர் திருத்தங்கூர் பகுதியில் கோவிலுக்கு சொந்த குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த குளம் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த ஆகாய தாமரைகள் அழுகி தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த பொதுமக்கள் முடியால் சிரமப்பட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.