ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு சில சமூக விரோதிகள் பள்ளி நேரம் முடிந்த பிறகு பள்ளி வளாகத்திற்குள் சென்று மதுபானத்தை அருந்திவிட்டு பள்ளி வளாகத்துக்குள் உடைத்து வீசுகின்றனர். இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகின்றன. மதுபாட்டில்கள் உடைந்து கீழே கிடப்பதால் மாணவர்களின் கால்களை பதம்பார்க்கிறது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிகுமார், ஆனைமலை