பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2022-09-16 17:01 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொட்டியனூர், 4-வது வார்டில் உள்ள பொது சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் பாழடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு புதர்மண்டி கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், ஓமலூர்.

மேலும் செய்திகள்