சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த மைதானத்தில் பள்ளி மாணவர்கள் விளையாட சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மைதானத்தை பொது மக்களும் நடைபயிற்சி செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பள்ளிக்கூட மைதானத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?