கழிவறை கட்டுமான பணி விரைவு படுத்தப்படுமா?

Update: 2022-07-13 14:36 GMT

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த பஸ்நிலையத்தில் இருந்த பழைய கழிவறைகள் கட்டிடம் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய கழிவறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நீண்டநாட்கள் ஆகியும் நிறைவடையவில்லை. பணிகள்ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால்  பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்