ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்குமுன் இந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.