கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் புகழூர் கால்வாய் அருகே பெரிய குளம் வெட்டப்பட்டது. இந்த குளத்திற்கு ஓலப்பாளையம், கவுண்டன்புதூர், செல்வநகர் வழியாக வரும் உபரி நீர் வந்து நிரம்பி புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. குளம் நிரம்பி வழியும் போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு வற்றாத கிணறுகளாக உருவானது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் நெடுகலும் தூர் வாராததால் ஏராளமான செடி,கொடிகள் முளைத்துள்ளது. குளத்திலும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக குளத்திற்குள் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் நிரம்ப முடியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.