திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில் காலை மற்றும் மாலை நேரங்களில் கால்நடைகள் சாலையின் ஓரங்களில் படுத்துக்கொள்வதும், அங்குமிங்கும் அலைவதும், நடு ரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை சாலையில் உலா விடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.