கொடைக்கானல் தாலுகா தடியன்குடிசை-பெரும்பாறை இடையேயான சாலையின் ஓரத்தில் ஒரு மரம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று, மழையின் போது மரம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டு விடும். அதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.