தர்மபுரி மாவட்டம் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாமியாபுரம் கூட்ரோடு. இங்கிருந்து சேலம், வேலூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த கூட்ரோடு பகுதியில் ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நடக்கிறது. எனவே விபத்துகளை தடுக்க அதிகாரிகள் இங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி.