பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து மெஜஸ்டிக் சிட்டி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் மணல், ஜல்லி போன்ற கட்டிட பொருட்கள் போடப்பட்டுள்ளன. பல நாட்களாகியும் அந்த பொருட்கள் அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளன. மேலும் அந்த இடத்தில் கட்டிட கழிவுகளும் வீசப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையில் உள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.