தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவறைகள் கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடக்கின்றன. இதன்காரணமாக அலுவலகத்துக்கு வரும் பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட அலுவலகத்தில் உள்ள கழிவறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா? -படம் உள்ளது.