தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி ராயம்பேட்டை ஊராட்சியில் ஆக்கினாதபுரம் கிராமத்தின் சாலையோரத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் உள்ள பெரிய கிளைகள் பட்டுபோய் உள்ளன. இதன்காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக மரக்கிளைகள் வாகன ஓட்டிகள் மீது விழுந்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தினால் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன் மரத்தின் பட்டுப்போன பகுதிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?