நெல்லிக்குப்பத்தில் ஒரு பஸ் நிலையம் உள்ளது. ஒரு கோடி ரூபாய் செலவில் இந்தபஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் பஸ்கள் உள்ளே வராத காரணத்தினால் யாருக்கும் பயன்படாமல் பஸ்நிலையம் இருக்கிறது. இதனால் அங்குள்ள கடைகளும் செயல்படுவதில்லை. இதன் மூலம் நகராட்சிக்கு வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், மக்கள் பயன்பெறும் வகையிலும் இந்த பஸ் நிலையத்தை அதிகாாிகள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும் என்பது நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.