திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் சுக்காம்பார் கிராமத்தின் அருகே புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இந்தநிலையில் சாலையின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தை மூடினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.