ஊட்டி அருகே கல்லட்டி சோலாடாவில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளி கட்டிட மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.