கரூர் மாவட்டம், கரைப்பாளையம் அருகே இளங்கோ நகர் பகுதியில் உபரி நீர் கால்வாய் செல்கிறது. இந்த விவசாய நிலங்களில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீர் இந்த கால்வாய் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் கால்வாய் முழுவதும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.