அரியலூர் மாவட்டம், தா.பழூர் மதனத்தூர் சாலை துணை மின்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கடையில் அனுமதியின்றி பார் செயல்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக மது ஒழிப்பு போலீசார் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்ட பாரை மூடி சீல் வைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.