மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் சிகிச்சை பெற பெரும் அவதிப்படுகிறார்கள். தாலுகா தலைநகரமான குத்தாலம் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் தினமும் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்