பாலூட்டும் தாய்மார்கள் அறை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-15 10:41 GMT
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திற்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலைய வளாகத்தில் குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்று தனி அறை அமைக்கப்பட்டது. ஆனால்  முறையான பராமரிப்பின்றி தற்போது அந்த அறையின் கதவுகள் பழுதடைந்துள்ளது. மேலும் அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்துள்ளதுடன், விளக்குகளும் எரியவில்லை. இதனால் அங்கு வரும் தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அறையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி