குழாய் பதிக்கும் பணிக்கு தோண்டப்பட்ட குழி மூடப்படுமா?

Update: 2022-09-14 15:27 GMT
பெங்களூரு ஜே.சி.நகர் விஷன் ஆப்டிக்கல் பகுதியில் உள்ள நடைபாதை அருகே பூமிக்கு அடியில் குழாய் பதிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில் குழியை மூடாமல் அப்படியே விட்டு உள்ளனர். இரவில் நடைபாதையில் நடந்து வருபவர்கள் அந்த குழிக்குள் தவறி விழும் நிலை இருந்தது. தற்போது அந்த குழி மீது இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து உள்ளனர். ஆனாலும் அந்த குழிக்குள் யாராவது தவறி விழுவதற்குள் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்