மூடி இன்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2022-09-14 15:26 GMT
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி தொட்டதோகூரு பகுதியில் உள்ள சாலையில் சாக்கடை கால்வாய் மூடி இன்றி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் உயர்மட்டம் வரை தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய்க்கு மூடி இல்லை என்று அப்பகுதி மக்கள் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரவில் அந்த வழியாக நடந்து வருபவர்கள் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழும் நிலையும் உள்ளது. இதனை தடுக்க சாக்கடை கால்வாய்க்கு உடனடியாக மூடி அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்