பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் மெயின் ரோட்டில் கடந்த 3 நாட்களாக சாலையில் இரும்பு தடுப்பு பலகை கிடக்கிறது. அந்த பலகையை அகற்ற கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த இரும்பு தடுப்பு பலகை அகற்றப்படவில்லை. இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அந்த பலகையில் வாகனத்தை மோதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்தை தடுக்கும் வகையில் அந்த இரும்பு தடுப்பு பலகையை உடனடியாக அகற்ற வேண்டும்.