விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கிணறு

Update: 2022-09-14 14:19 GMT
கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி செல்லும் மெயின் சாலையோரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை சுற்றி எந்த தடுப்புச்சுவரும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த இடத்தில் கிணறு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் கட்டி, அப்பகுதியில் அறிவிப்பு பதாகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்