புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன. இந்த பாசன குளங்களில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி கிடக்கின்றன. குளங்களின் வரத்து வாய்க்கால்களிலும் இந்த கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. இதனால் மழை பெய்தாலும் பாசன குளங்களில் தண்ணீர் தேங்குவதில்லை. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே பாசன குளங்களில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.