திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தாப்பாய் கிராமத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் மழைநீர் நிரம்பி செல்வதால் இப்பகுதிக்கு குடிநீரை ஏற்றும் மின் மோட்டார் நீரில் மூழ்கி பழுதாகி விட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போதும் அதே நிலை தொடர்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.