தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் நாற்கரசாலை சர்வீஸ் ரோடு அருகில் வாறுகாலில் கான்கிரீட் மூடிகள் சேதமடைந்து இருப்பதாக காளிராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சேதமடைந்த கான்கிரீட் மூடிகளை அகற்றி விட்டு புதிதாக அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.