ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக ஏரி தூர்வராமல் உள்ளது. மேலும் இந்த ஏரியை சுற்றி குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாலும், பல தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கலப்பதாலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. சுகாதாரமற்று காணப்படுவதால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஏரியை முறையாக பராமரித்தால் சுமார் 1500 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும். இதுபற்றி பல முறை ஓசூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுப்பார்களா?