டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் உள்ள தெருவிளக்கு 4 நாட்களாக சரியாக எரியவில்லை. விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது. தற்போது தெருவிளக்கு எரிந்து வருகிறது. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.