திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தரைதேக்க தண்ணீர் தொட்டியின் சிமெண்டு மூடி உடைந்து விழுந்துள்ளது. இதற்கிடையே இந்த தண்ணீர் தொட்டியின் அருகே பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் விளையாடுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, விபரீதம் நிகழும் முன்பு சேதமடைந்த சிமெண்டு மூடியை அகற்றிவிட்டு, புதிதாக சிமெண்டு மூடி கொண்டு தண்ணீர் தொட்டியை மூட வேண்டும்.