திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மைலோடு கிராமத்தில் காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். முறையாக பராமரிக்காததால் தற்போது ஆகாயதாமரை படர்ந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆகாய தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாடுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
எஸ்.ஹரிதாஸ், மல்லன்கோடு