சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஹைக் கோர்ட்டு காலனியில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பணிகள் இன்றளவும் முடிவடையாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.