தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொது சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மன்னார்குடி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து துர்நாற்றம் அதிகளவில் வெளியேறுகிறது. இதன்காரணமாக பயணிகள் மூக்கை மூடியபடி பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும், கழிப்பிடம் பராமரிப்பில்லாத காரணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?