நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கோணங்கிபாளையம் காளிப்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் புதர்மண்டி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோகுல்ராஜ், மல்லசமுத்திரம், நாமக்கல்.