கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் அலுவலக வளாகத்தில் படுத்து கிடக்கின்றன. இவற்றை விரட்டும் போது பாய்ந்து வருவதால் அலுவலர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தாலுகா அலுவலகத்துக்கு மாடுகள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், கிருஷ்ணகிரி.